/
கோயில்கள் செய்திகள் / சுதந்திர தின விழா; சுந்தரராஜ பெருமாள் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
சுதந்திர தின விழா; சுந்தரராஜ பெருமாள் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
ADDED :479 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் உட்பட பெருமாள் கோயில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 78 வது சுதந்திர தின நாளில், தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜ கோபுரத்தில் ஏற்றி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.