உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 19ம் தேதி திருக்கல்யாணம்

பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 19ம் தேதி திருக்கல்யாணம்

திருநெல்வேலி: எட்டயபுரம் நடுவிற்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 19ம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் கந்த சஷ்டி திருவிழா திருக்காப்பு முடித்தலுடன் துவங்கியது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. விழா நாட்களில் இரவில் அபிஷேக ஆராதனை நடக்கிறது.19ம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம், விசேஷ அபிஷேக ஆராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை எட்டயபுரம் நடுவிற்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருக பக்தர்கள் மற்றும் கோயில் பூசாரி ராஜ்குமார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !