உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கோவை; தடாகம் ரோடு தெலுங்குபாளையம் பால் சொசைட்டி எதிர்ப்புறம் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கொடுத்த 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் 10 ரூபாய் நோட்டுகள் அம்மன் மேல் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !