பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம்
ADDED :788 days ago
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் ஆடி இறுதி நாளான நேற்று ரத வீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் ஆடி மாத லட்சார்ச்சனை ஜூலை 17 ல் துவங்கியது. ஆக. 10 வரை நடைபெற்ற விழாவில் ஜூலை 19ல் முத்தங்கி அலங்காரம், ஜூலை 26ல் மீனாட்சி அலங்காரம், ஆக.2ல் சந்தன காப்பு அலங்காரம், நேற்று (ஆக. 16) தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு வெள்ளி தேரில் பெரியநாயகி அம்மன், சுவாமி வீற்றிருக்க வெள்ளி தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.