உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை; திருவிளக்கு வழிபாடு கோலாகலம்

வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை; திருவிளக்கு வழிபாடு கோலாகலம்

பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி ஊஞ்சல் சேவை மற்றும் திருவிளக்கு வழிபாடு கோலாகலமாக நடந்தது.


எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து ஆடி 5 வது வெள்ளிக்கிழமையையொட்டி காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை தாயார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் பெருமாள், தாயார் மலர் பந்தலில் அலங்காரமாகினர். பின்னர் நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !