கரியமல்லம்மாள் கோயில் பொங்கல் விழா; சேத்தாண்டி வேடம் அணிந்து வந்த பக்தர்கள்
ADDED :418 days ago
கமுதி; கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நேற்று 508 விளக்கு பூஜை நடந்தது. சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அக்கினிசட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பக்தர்கள் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினார். கரியமல்லம்மாள் அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள், திரவியபொடி உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.