கேரளா பிராமண சபா சார்பில் புதிய முதியோர் இல்லம் அர்ப்பணிப்பு விழா
கேரளா; கேரளா பிராமண சபா சார்பில் ஆனந்த குடிர் டிரஸ்ட் ஸ்தாபன மானது பாலக்காட்டில் கட்டியுள்ள குருக்ருபா என்னும் முதியோர் இல்லத்தினை சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமை அதிகாரி பி ஏ முரளி 17ஆம் தேதி அர்ப்பணித்தார். சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம் 2020 ஆண்டு, இதற்கு ரூ 50001/- தொகையினை ஆசீர்வதித்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கேரள மகாஜன சபா நிர்வாகிகள் மற்றும் நன்கொ டையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் ரூ 5 லட்சத்தினை முரளி வழங்கினார். டிரஸ்டின் தலைவர் சிதம்பரநாதன், நிர்வாகிகள் வெங்கடேஸ்வர சர்மா, ஆடிட்டர் வாசுதேவன், கேரள பிராமண சபா முன்னாள் தலைவர் மற்றும் தலைவர் , குளோபல் பிராமணர் கூட்டமைப்பு கரிம்புழா ராமன், எச்.கணேஷ் மாநில தலைவர் கேரள பிராமண சபா, ஸ்ரீ சிவராம கிருஷ்ணன், என்.ஏ.கணேசன் மாவட்ட தலைவர் கேரள பிராமண சபை ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். அதன்பின் சிருங்கேரி சாரதா பீடத்தின் பாலக்காடு கிளையின் ஸ்ரீ சாரதா கோவிலுக்கும், வேத பாடசாலைக்கும் விஜயம் செய்தார்.