சாரதாம்பாள் கோவில் சிருங்கேரி மட தலைமை நிர்வாக அதிகாரி பார்வையிட்டார்
பாலக்காடு; பாலக்காடு ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலை சிருங்கேரி மடம் தலைமை நிர்வாக அதிகாரி முரளி பார்வையிட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு சந்திரநகர் அருகே உள்ளது சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலும் மட்டத்தின் கீழ் செயல்படும் வேத பாடசாலையும். இதை நேற்று சிருங்கேரி மடம் தலைமை நிர்வாக அதிகாரி முரளி பார்வையிட வந்துள்ளனர். அவரை பாலக்காடு சிருங்கேரி மடம் தர்ம அதிகாரி கரிம்புழை ராமன் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் வேதா ஆசிரியர்களான கிரிதர் தனபாடிகள், தார்ஹஸ், ஸ்ரீராம், சரவணன், கோவை சிருங்கேரி மடம் தர்ம அதிகாரி விஜயானந்த், திருப்பூர் சிங்கேரி மடம் தர்ம அதிகாரி ராமநாதன், சந்தான கோபாலகிருஷ்ணன், நடராஜன், ராஜன், கிருஷ்ணன், கோவில் மேலாளர் கணேசன், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேத பாடசாலை மாணவர்களுடன் வேத கலாச்சாரத்தை குறித்தும் சனாதன தர்மத்தை குறித்தும் முன்மொழிந்தார்.
அவர் அப்போது கூறியதாவது: இந்தியாவின் கலாச்சாரம் உலகை வழிநடத்தும் திறன் கொண்ட கலாச்சாரம் என்றும், இந்தியாவை உலகமே பின்பற்ற வேண்டிய நேரம் இது என்றார்.