உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோயில் விழாவில் வீமன் வேஷம் நிகழ்வு

திரவுபதி அம்மன் கோயில் விழாவில் வீமன் வேஷம் நிகழ்வு

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஆக.9 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக இராமாயணம் மற்றும் திரவுபதியின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும் வகையில், வீமன் மற்றும் திரவுபதி வேடமிட்டு, நகர்வலம் வந்து விழா கொண்டாடப்படுகிறது. விழாவின் தொடர்ச்சியாக பெத்தார்தேவன் கோட்டை, கீழக்கோட்டை, புல்லமடை, செட்டியமடை, சப்பாணியேந்தல் உள்ளிட்ட கிராமத்தார்களின் வீமன் பேராண்டிகள் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இன்று சிலுகவயல் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடலில் வர்ணம் பூசி, வேப்ப மர இலைகளை கட்டியும், வீமன் பேராண்டிகள் வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தனர். பின்பு, மாலையில் மூலவர் அம்மனுக்கு கிராமத்தார்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக, பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று, ஆக.30ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து செப். 1 ல் மஞ்சள் நீராட்டு விழாவும், செப்.3 ல் பட்டாபிஷேகமும், நடைபெற்று விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் இந்து பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !