உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை; பக்தர்கள் பரவசம்

திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை; பக்தர்கள் பரவசம்

திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன சேவை நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கருட சேவை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோலாகலமாக நடைபெற்ற கருட சேவையில் திருமலை ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !