புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :411 days ago
ராஜபாளையம்; ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா செய்திருந்தார்.
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ் தலைமை வகித்தனர். இருக்கன்குடி ,சுற்றுக்கிராமத்தை சேர்ந்தபெண்கள் பங்கேற்றனர்.