குரும்பாபட்டு ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா
ADDED :410 days ago
புதுச்சேரி; குரும்பாபட்டு ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் நடந்த ஆராதனை விழாவில், ஏராமானோர் பங்கேற்றனர். குரும்பா பட்டு, ராகவேந்திரா நகரில், ராகவேந்திர சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு ராகவேந்திர சுவாமிகளின், 353ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று துவங்கியது. காலை 8:30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கனகாபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ஸ்வஸ்தி மற்றும் பல மந்த்ராட்சதையும் நடந்தன. இந்த சிறப்பு வழிபாடு, இன் றும், நாளையும் நடக்கிறது.