உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

கச்சிராயபாளையம்; கரடிசித்துார் கிராமத்தில் மகாநாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் மகாநாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. தொடர்ந்து பொதுமக்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு பூஜை, ஊரணி பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !