உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தமிழ் முருகன் மாநாடு; பழநியில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

முத்தமிழ் முருகன் மாநாடு; பழநியில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநியில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று (ஆக., 24) கோலாகலமாக துவங்கியது. நேற்றும், இன்றும் பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் இந்த மாநாடு நடக்கிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அமைச்சர் சேகர்பாபு நேறறு நினைவுப் பரிசு வழங்கினார். இன்று இரண்டாம் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு நடக்கும் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட பக்தர்கள்  திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !