/
கோயில்கள் செய்திகள் / காலபைரவர் கோவிலில் நடந்த அஷ்டமி பூஜை; கருவறைக்கு வந்த 2 நாய்கள்.. பக்தர்கள் பரவசம்
காலபைரவர் கோவிலில் நடந்த அஷ்டமி பூஜை; கருவறைக்கு வந்த 2 நாய்கள்.. பக்தர்கள் பரவசம்
ADDED :438 days ago
தர்மபுரி; தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அஷ்ட பைரவ யாகம் உள்ளிட்ட பல யாகம் நடந்தது. தொடர்ந்து, 64 வகை அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் சுற்றித்திரியும் இரு நாய்கள், மூலவர் அபிஷேகத்தின் போது, கருவறையில் பைரவர் சிலை முன் படுத்தும், நின்றபடி இருந்ததையும் பார்த்து, பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில், 1,008 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு யாக பூஜை நடந்தது.