பரமக்குடி முனியப்பசாமி கோயிலில் அபிஷேகம்
ADDED :484 days ago
பரமக்குடி; பரமக்குடியில் அருள் பாலிக்கும் ஒத்தப்பனை முனியப்ப சாமி கோயில் ஆவணி மாத விழா நடந்தது. பரமக்குடி போர்டிங் ரோடு பகுதியில் ஒத்தப்பனை முனியப்ப சாமி கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் தனிச்சன்னதியில் அருள்பாளிக்கிறார். தொடர்ந்து ஆவணி மாத வெள்ளிக்கிழமை நாளில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து படையல் இட்டு குடிமக்கள் வழிபட்டனர்.