உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் மூன்றாம் நாள் சதுர்த்தி ஊர்வலம்
ADDED :612 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா, ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. மூன்றாம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட மூலவர், உற்சவருக்கு நடந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.