உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பார்பட்டி கோயில் திருவிழாவில் அருவாள் மீதேறி அருள்வாக்கு கூறிய பூசாரி

வேம்பார்பட்டி கோயில் திருவிழாவில் அருவாள் மீதேறி அருள்வாக்கு கூறிய பூசாரி

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் கோவில் முன் பூசாரி அரிவாள் மீது ஏரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோபால்பட்டி வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவிலுள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்றது. இதில் சாமி சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்னர் அம்மன் அலங்கரித்து கோவிலில் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகளுடன் முளைப்பாரி சுமந்துவர ஊர்வலமாக வேம்பார்பட்டி, கோபால்பட்டி வழியே அழைத்து செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழியில் கோபால்பட்டி காளியம்மன் கோவிலின் முன்பு பூசாரி அரிவாள் மீதேறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இறுதியில் அம்மன் குளத்தில் சாமி கரைக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !