சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம்
ADDED :478 days ago
தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவின் 11வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட் கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (02ம் தேதி) திங்களன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை அய்யாவுக்கு பணிவிடையும், அய்யா தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது. தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகர அரகர என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.