ஆவணி செவ்வாய்; கோவை பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகனுக்கு திரிசதி அர்ச்சனை
                              ADDED :423 days ago 
                            
                          
                          
கோவை; ஆவணி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை சுப்பிரமணிய திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இதில் கணவன் - மனைவி ஒற்றுமை, திருமணம், ஐஸ்வர்யம் பெற, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சகல வரங்களைப் பெறவும் முருக பெருமானுக்கு சிறப்பு திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.