உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி செவ்வாய்; சொந்தவீடு அமைய.. வாழ்வு சிறக்க இருக்கு எளிய வழிபாடு!

ஆவணி செவ்வாய்; சொந்தவீடு அமைய.. வாழ்வு சிறக்க இருக்கு எளிய வழிபாடு!

தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இன்று பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !