/  
                        கோயில்கள்  செய்திகள்  /  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் காப்பு கட்டும் நிகழ்ச்சி
                      
                      விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் காப்பு கட்டும் நிகழ்ச்சி
                              ADDED :422 days ago 
                            
                          
                          
அவிநாசி; விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலை பொறுப்பாளர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி திருமுருகன் பூண்டி கோவிலில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று ஹிந்து முன்னணி சார்பில் சிலை பொறுப்பாளர்களுக்கு மாலை போட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் நடைபெற்றது. இதில் 27 சிலை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மாலை மற்றும் காப்பு கட்டி விரதங்களை தொடங்கினர். இந்நிகழ்ச்சியை திருமுருகன் பூண்டி நகர பொறுப்பாளர் சங்கர், துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் முக்கிய வார்டு பொறுப்பாளர்கள், சிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.