பரமக்குடி கோயில்களில் அமாவாசை வழிபாடு
ADDED :424 days ago
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள கோயில்களில் அமாவாசை நாளான நேற்று இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பரமக்குடி புது நகரில் 18ம் படி கருப்பண சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு நேற்று மாலை கருப்பணுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கருப்பண்ண சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு 18 படிகளில் சூடம் ஏற்றி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
*பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அனுமார் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்ணெயில் செந்தூர அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் பல்வேறு கோயில்களில் அமாவாசை நாளில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.