திருவரங்குளம் அரங்குளநாதர் கோவிலில் கோபுரம் சீரமைக்க நடவடிக்கை
ADDED :511 days ago
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில், பழமையான பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் ராஜகோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், இடிந்த நிலையிலும் இருப்பதால், கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் பெயர்ந்து விழும் சூழல் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, தற்போது, சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கோவிலில், 1984 மற்றும் 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்வதற்காக, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விழா கமிட்டி சார்பில், அனுமதி கேட்டு பல மாதங்களாகின்றன. இதுவரை அனுமதி வழங்கவில்லை.