உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கடும் நெருக்கடி பிப்ரவரியில் மாஸ்டர் பிளான்!

சபரிமலையில் கடும் நெருக்கடி பிப்ரவரியில் மாஸ்டர் பிளான்!

சபரிமலை: சபரிமலையின் மேம்பாட்டு பணிகளுக்கான மாஸ்டர் பிளான் பிப்ரவரியில் செயல்படுத்தப்படும், என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ் கூறினார்.அவர் கூறியதாவது: சபரிமலையில், தற்போதுள்ள வசதிகள் போதுமானது அல்ல. இங்கு 5,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, தங்கும் வசதி செய்து கொடுக்க முடியவில்லை. கட்டடங்கள் மிகவும் பழையதாகி விட்டது. பக்தர்களுக்கும் வசதிகள் போதுமானது அல்ல. இதனால் "மாஸ்டர் பிளான் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. மகரவிளக்கு முடிந்த உடன் பணிகள் தொடங்கப்படும். நவ., 21 ல் நடக்க உள்ள கூட்டத்தில் முடிவு எட்டப்படும். இப்பணிகள் பெரும்பாலும் "ஸ்பான்சர் மூலம் செயல்படுத்தப்படும். தற்போது, 20 கோடி ரூபாய்க்கு "ஸ்பான்சர் கிடைத்துள்ளது; நூறு ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மின்தடை: சபரிமலையில் நேற்று காலை, 10 மணி முதல் மாலை 3 வரை, மின்தடை நிலவியது. மரக்கூட்டம் அருகே பக்தர்கள் செல்லும் பாதையில், ஆபத்தான மரத்தை வெட்டுவதற்காக மின் தடை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !