ஹலசூரு லேக் வியூ விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
பெங்களூரு; பெங்களூரு ஹலசூரு ‘லேக் வியூ’ விநாயகர் கோவிலில் 38வது ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற, லேக் வியூ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை முதல் 11ம் தேதி வரை 38வது ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம்; காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம்; காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு கலச ஸ்தா பனம், அஷ்ட திரவிய சகஸ்ர மோதக மஹா கணபதி ஹோமம். திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு ருத்ர ஹோமம்; மாலை 6:00 மணிக்கு கிரிஜா கல்யாண உற்சவம்; 10ம் தேதி காலை 8:00 மணிக்கு சுதர்சன ஹோமம்; மாலை 6:00 மணிக்கு கலாசார நிகழ்ச்சிகள்; 11ம் தேதி காலை 8:00 மணிக்கு மஹாசண்டிகா ஹோமம்; மாலை 6:00 மணிக்கு கலாசார நிகழ்ச்சிகள்; 17ம் தேதி ஆனந்த சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா சுவாமி பிரதிஷ்டை 10வது ஆண்டு விழா நடக்கிறது. காலை 7:00 மணிக்கு கலச அபிஷேகம் சேவை, 10:00 மணிக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்யாணஉற்சவம் நடக்கிறது.