உந்திபூத்த பெருமாள் கோயிலில் கருட வாகனம் வெள்ளோட்டம்
ADDED :406 days ago
தொண்டி; தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் கருட வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. தொண்டியில் உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏகாதசி மற்றும் புரட்டாசியில் சிறப்பு பூஜை நடைபெறும். சில மாதங்களுக்கு முன்பு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இக் கோயிலுக்கு ஒரு பக்தர் மரத்தால் ஆன கருட வாகனம் செய்து கொடுத்தார். நேற்று முன்தினம் அந்த கருட வாகனம் சிலைக்கு பட்டாச்சாரியார் கருணாகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து முக்கிய தெருக்கள் வழியாக வெள்ளோட்டம் நடந்தது. பக்தர்கள் கருட வாகனத்தை சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். இனி வரும் விழா நாட்களில் உந்திபூத்த பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா செல்வார்.