உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

புதுச்சேரி; முத்தியால்பேட்டை  லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 53ம் ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி, இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நாளை கிருஷ்ண காயத்ரி ஹோமம், அதனை தொடந்து, 14ம் தேதி வரை, திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்வான வரும் 15ம் தேதி காலை 9:00 மணியில் முதல் 10:15 வரை ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !