உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்

கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்

சிவகங்கை; கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலில் செப்.,4ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல், கும்ப அலங்காரம், திரவியாகுதி, மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கியது. மங்கள இசை, திருமுறை, பாராயணம், பாவனாபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகளும், அததை தொடர்ந்து மங்கள இசை, திருமுறை, பாராயணங்கள் பாடப்பட்டன. இரவு 8:15 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. செப்.,7 காலை 8:35 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி துவங்கும். செப்., 8 இன்று காலை 6:15 மணிக்கு ஆறாம் கால வேள்வியுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது. மண்டப சாந்தி, நாடி சந்தனம், கோபூஜை நடைபெற்று,  காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் . விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !