உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED :505 days ago
உத்தரகோசமங்கை,; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தங்கக்கவச அலங்கார பூஜைகள் நடந்தது.
மூலவர் அம்மன் மற்றும் மங்கை மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. வராகி அம்மனுக்கு பட்டு சாத்தியும் தங்க கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனையில் சுவாமி தரிசனம் செய்தனர். அண்ணாச்சி பழம், கிழங்கு வகைகள் பக்தர்கள் நெய்வேத்தியமாக படைத்தனர். ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து உருண்டையாக நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.