மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
365 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
365 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
365 days ago
நத்தம், நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பன்னியாமலையில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்றுமுன்தினம் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லெட்சுமி பூஜை, கணபதிஹோமம், மற்றும் முதல் காலயாக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் கோவிலை சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த விழாவையொட்டி மூலவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பன்னியாமலை கிராம ஊர் பொதுமக்கள், காரணக்காரர்கள் செய்திருந்தனர்.
365 days ago
365 days ago
365 days ago