ராஜகணபதி கோயிலில் வருஷாபிஷேகம்; சுவாமிக்கு 18 வகை அபிஷேகம்
ADDED :480 days ago
மானாமதுரை; மானாமதுரை அரசு மருத்துவமனை எதிர்புறம் தென்றல் நகரில் உள்ள ராஜ கணபதி கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் காகசாலை பூஜைகள் ஆரம்பமாகியது.இதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.