வடவள்ளியில் அனுஷ மஹோத்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :729 days ago
கோவை; கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் அனுஷ நட்சத்திர மஹோத்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மாதந்தோறும் நடைபெறும் அனுஷ நட்சத்திர மஹோத்சவம் நிகழ்வு கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி மகா பெரியவரை தரிசனம் செய்தனர்.