உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரிசனம்

திருத்தணி; பெங்களூரில் இருந்து வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். அவருக்கு, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆனணயர் ரமணி ஆகியோர் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். ஆபதசாகய விநாயகர், உற்சவர் சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளுக்கு அழைத்து சென்றனர். அனைத்து சன்னிதிகளிலும் ரவிசங்கர் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருத்தணியில் இருந்து திருப்பதி திருச்சானுார் பத்மாவதி தயார் கோவிலுக்கு சென்று இரவு அங்கிருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !