திருமறைநாதர் கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் மாணிக்கவாசகர்
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து மாணிக்க வாசகர் ஆவணி மூல திருவிழாவிற்கு மதுரைக்கு புறப்பட்டார். பாதச்சிலம்பொலி மண்டகபடியில் எழுந்தருளியவர் மாலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை அடைந்தார். நாளை (செப் 12) நரியை பரியாக்கிய திருவிளையாடல், செப். 13 பிட்டுதோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. செப். 14 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடன் மாணிக்கவாசகர் கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பிறகு செப்.15, 16 மீனாட்சி சுந்தரேசுவரருடன் திருவீதி உலா மற்றும் விடை பெற உள்ளார். பிறகு பல்வேறு மண்டபகபடிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி செப். 21 ல் மாணிக்கவாசகர் கோயிலை வந்தடைகிறார். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் ருக்மணி, இணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞ நாராயணன், பேஷ்கார் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.