உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலையில் யானை பார்வதி ; பக்தர்கள் சோகம்

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க முடியாத நிலையில் யானை பார்வதி ; பக்தர்கள் சோகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு,  உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மூன்று நாட்களாக கால்நடை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர். ஆவணி மூலத் திருவிழாவில் யானை பார்வதி பங்கேற்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் சோகம் அடைந்தனர். யானை பார்வதி விரைவில் குணம் பெற வேண்டும் என அம்மனை பிரார்தித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !