உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளர்பிறை அஷ்டமி; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை

வளர்பிறை அஷ்டமி; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களிலும், தினசரி அர்த்த சாம பூஜைகளும் சிறப்புக்குறியவை. இன்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணி அளவில் மூலவர் சன்னதியில் ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யர்களால் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பதினொரு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !