விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆவணி திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :587 days ago
விருதுநகர்; மீனாட்சி, சொக்கநாதர் கோவில் ஆவணி விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
விருதுநகர்; விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரமோற்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று (செப்., 12ல்) திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்திருந்தது.