பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.32 கோடி
ADDED :471 days ago
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.32 கோடி கிடைத்தது. இதன் எண்ணிக்கையில் 1.237 கிலோ தங்கம், 21.638 கிலோ வெள்ளி, ரூ.3 கோடி 32 லட்சத்து 50 ஆயிரத்து 873 மற்றும் 1012 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. இப்பணியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.