மாமல்லபுரத்தில் சதுர்த்தி விழா; செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :424 days ago
மாமல்லபுரம்; மாமல்லபுரத்தில் உள்ள அண்ணாநகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், 37ம் ஆண்டு சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில், கடந்த 7ம் தேதி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, மறுநாள் சதுர்த்தி வழிபாடு மகாதீபாராதனையுடன் நடத்தப்பட்டது. 9ம் தேதி, மூலவருக்கு மஹா அபிஷேகம் வழிபாடு நடத்தி, அலங்கார விநாயகர் வீதியுலா சென்றார். நேற்று முன்தினம், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்கார வழிபாடு நடந்தது. நேற்று, சதுர்த்தி பிரதிஷ்டை விநாயகர் கடற்கரைக்கு உலா சென்று, கடலில் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அனைத்து நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.