அழகு வள்ளியம்மன் கோயிலில் பக்தர்கள் வினோத நேர்த்திகடன்
ADDED :747 days ago
கமுதி; கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழா முன்னிட்டு செப்.1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் சக்தி கரகம், அக்கினி சட்டி, பால்குடம் எடுத்துவந்து பூக்குழி இறங்கினர். அழகுவள்ளி அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. பக்தர்கள் வினோதமான முறையில் சாக்குவேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி தூக்கி ஊருணியில் கரைத்தனர். விழாவில் கமுதி, முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.