பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் ஆவணி மூலப்பிட்டு திருவிழா விமர்சை
ADDED :467 days ago
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மூல பிட்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி, நகரின் மத்தியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு ஆவணி மூலப்பிட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும், வந்தியம்மை தாயாருக்கும், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. வாணியர் மடத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு, பக்தர்களால், சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, குழந்தைகள், சிவன் மற்றும் வந்தியம்மை தாயார் வேடம் அணிந்து, திருவாசம் பாடி வழிபாடு நடத்தினர். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அன்னதான வழங்கப்பட்டது.