ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்
ADDED :407 days ago
ஆலங்குளம்; ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி, யோகாம்பிகை அம்பாள் கோயில் ஆவணித் திருவிழா கடந்த௪ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள், பஜனை, வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் சிகரநிகழ்வான தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. வைத்தியலிங்க சுவாமி தேரை ஆண்களும், யோகாம்பிகை அம்பாள் தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். வீதிகள் வழியாக தேர்கள் நிலையம் சேர்ந்தன. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரகிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.