ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :406 days ago
கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றான ஓணம் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக கோவையில் வசிக்கும் மலையாள சமூகத்தினர் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியும், சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.இதில் சுவாமி ஐயப்பனின் திரு உருவப்படத்திற்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.கோவிலின் முகப்பில் உள்ளகொடி மரத்தின் கீழ்பூக்களால் ஆன கோலம்மிகப் பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்தது. அதன் முன்பாகபொதுமக்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்து கொண்டனர். ஓணம் பண்டிகையையொட்டி கோவிலில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.