உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை திரிசூலம் திரிசூலநாதசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை திரிசூலம் திரிசூலநாதசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

சென்னை; திரிசூலத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ திரிசூலநாதசுவாமி திருக்கோவிலின் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

சென்னை, திரிசூலத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேத திரிசூலநாதசுவாமி திருக்கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி பூஜை, கால பூஜை, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று ராஜா கோபுரங்களுக்கு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் மூலவர் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித  நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !