உலகளந்த பெருமாள் கோலத்தில் அருள்பாலித்த கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி
ADDED :462 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஓங்கி உலகளந்த பெருமாள் திருக்கோலத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.