உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு

நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு

கோவை: ‘‘பகவான் மஹாவிஷ்ணுவுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம்,’’ என, ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசினார் கோவை திருப்பாவை சங்கம் மற்றும் கோதண்டராமர் கோவில் சார்பில், 67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி ராம்நகர் எஸ்.என்.வி.அரங்கில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசியதாவது: பகவான் இந்த பூமியில் அவரதாரம் எடுத்தது அரக்கர்களையும், தீயவர்களையும் அழிப்பதற்காக மட்டுமல்ல; பகவானை அனுதினமும் நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஆசீர்வதிக்கவே.


நாராயணனுக்கு உரியது துளசி. பகவானின் திருமேனியில் நிரந்தரமாக துளசி வாசனை இருக்கும். துளசியை பகவான் மட்டுமே தலையில் சூடுவார். ஆண்கள் காதில் வைக்கலாம். பெண்கள் வைக்க கூடாது. வைகுண்டம் போகிறவர்கள் உடலோடும் போகலாம்; உடல் இன்றியும் போகலாம். ஆனால், வைகுண்டத்தில் பகவான் சரீரத்துடன், ஆடை அணிகலன்களுடன் திவ்யமாக காட்சி தந்து அருள்பாளிப்பார்.


பகவானுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம். அதனால் நாராயணனை நம்பியவர்களுக்கு வாழ்க்கையில் குறை ஒன்றும் இருக்காது.


இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !