ராமேஸ்வரத்தில் சுக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :403 days ago
ராமேஸ்வரம்,; ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலான சுக்ரீவர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுக்ரீவர் கோயில் கெந்தமாதன பர்வதம் அருகில் உள்ளது. பழமையான இக்கோயிலில் சுவர்கள் சேதமடைந்து இருந்ததால், திருக்கோயில் நிர்வாகம் ரூ. 22 லட்சம் செலவில் இரு ஆண்டுக்கு முன்பு திருப்பணிகள் செய்தனர். இப்பணி முடிந்ததும் நேற்று கோயில் முன்பு கோயில் குருக்கள் யாகசாலை பூஜை செய்தனர். இன்று காலை 3ம் கால யாகசாலை முடிந்ததும் கோயில் குருக்கள் புனித நீரை கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பொறியாளர் ராமமூர்த்தி, பேஸ்கார் முனியசாமி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.