உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்

புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 53வது பிரமோற்சவ விழா கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை திருமஞ்சனம், வேத பாராயண திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமுறையும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !