தெக்கூர் நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :447 days ago
மானாமதுரை; பெரியகோட்டை அருகே தெக்கூர் நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இங்குள்ள நிறைகுளத்து அய்யனார் மற்றும் உலகுடையம்மன் கோயிலில் பல லட்சம் செலவில் புனரமைப்பு பணி நடந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதற்காக யாக சாலை பூஜைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு துவங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை பூர்ணாஹூதி முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை தெக்கூர் முத்துவடுகநாதர், மீனாட்சி சுந்தரம் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.